என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கரோலின் வோஸ்னியாக்கி
நீங்கள் தேடியது "கரோலின் வோஸ்னியாக்கி"
சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் லாத்வியா வீராங்கனையை எளிதில் வீழ்த்தி வோஸ்னியாக்கி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #ChinaOpen
சீன ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டி இன்று பீஜிங்கில் நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் வோஸ்னியாக்கி - தரநிலை பெறாத லாத்வியாவின் செவஸ்டோவாவை எதிர்கொண்டார்.
அரையிறுதி ஆட்டத்தில் கரோலின் வோஸ்னியாக்கி 6-1, 6-3 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை குயாங் வாங்கை தோற்கடித்திருந்தார். செவஸ்டோவா அமெரிக்க ஓபன் சாம்பியனான நவோமி ஒசாகாவை 4-6, 4-6 என்ற நேர்செட்டில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தார்.
இதனால் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 8-ம் நிலை வீராங்கனைக்கு அதிர்ச்சி அளித்த செவஸ்டோவா வோஸ்னியாக்கியாவிற்கும் அதிர்ச்சி அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் வோஸ்னியாக்கி 6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கரோலின் வோஸ்னியாக்கி முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #USOpen #CarolineWozniacki
நியூயார்க்:
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான டென்மார்க் நாட்டை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கியும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சமந்தா ஸ்டோசரும் மோதினர்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே வோஸ்னியாக்கி அபாரமாக விளையாடினார். இதனால் அவர் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை கைப்பற்றும் விதமாக ஸ்டோசர் போராடினார். ஆனால அவரது போராட்டத்தை தடுத்து, இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் வோஸ்னியாக்கி கைப்பற்றினார்.
இதையடுத்து, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்டோசரை வென்று கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #USOpen #CarolineWozniacki
×

X